அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 
செய்திகள்

இயல்பை விட 14 சதவீதம் மழை குறைவு: வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

நிவர் புயல் காரணமாக மழை கொட்டி தீர்த்த போதிலும், இயல்பை விட 14 சதவீத மழை குறைவு என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக அமைச்சர் உதயகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‘‘வரும் 1-ந்தேதி (நாளை) மற்றும் 2-ந்தேதி (நாளைமறுநாள்)-களில் தென்தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். 

29.11.2020 வரை இயல்பான மழை 352.6 மி.மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால் 301.8 மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு. நீர்த்தேக்கங்களை பொறுத்தவரை 24 மணி நேரமும கண்காணிக்கப்படுகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT