அமைச்சர் தங்கமணி 
செய்திகள்

திமுக பின் தங்கலாம், திட்டங்கள் பின்தங்க வில்லை- அமைச்சர் தங்கமணி பதிலடி

கொங்குமண்டலத்தில் திமுக வேண்டுமானால் பின்தங்கலாம், வளர்ச்சி திட்டங்கள் பின்தங்கவில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மாலை மலர்

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கொங்கு மண்டலம் பின்தங்கி உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, 

கொங்கு மண்டலத்தில் திமுக வேண்டுமானால் பின்தங்கலாம், வளர்ச்சி திட்டங்கள் பின்தங்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதால் அரசியலுக்காக அரசு மீது குறை கூறுகிறார் ஸ்டாலின். 

என் மீதும் அமைச்சர் வேலுமணி மீதும் தனிப்பட்ட முறையில் குற்சாட்டுகளை கூறி வருகிறார் . எங்களுக்கு மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்றார்.