அமைச்சர் செங்கோட்டையன் 
செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல் சுயஉதவிக்குழு கடனும் ரத்து செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்:

கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மணடபத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை மற்றும் மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல், சுயஉதவிக்குழு கடனும் ரத்து செய்யப்பட உள்ளது என்பதை சூசகமாக தெரிவிக்கிறேன். இந்த அரசு தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்களை நாடி வர உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

SCROLL FOR NEXT