பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து விட்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியே வந்த காட்சி. 
செய்திகள்

பழனி முருகன் கோவிலில் அமைச்சர் உதயகுமார் சிறப்பு வழிபாடு

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மாலை மலர்

பழனி:

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று இரவு பழனிக்கு வந்தார். இன்று அதிகாலை மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக சிறப்பு வழிபாடு செய்தார்.

திருஆவினன்குடி கோவிலிலும் சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து படிப்பாதை வழியாக நடந்தே கீழே வந்தார். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்வருடப்பிறப்பு அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று பழனி கோவிலில் அ.தி.மு.க. வெற்றிக்காகவும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தியதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.