அமைச்சர் மா.சுப்ரமணியன் 
செய்திகள்

142 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் 142 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரணியன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரணியன் கூறும்போது, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் 142 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூரில் 1.98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆவடி அரசு மருத்துவமனையில் விரைவில் 50 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.