அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
செய்திகள்

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால் கொரோனா அதிகரிப்பது குறைந்து வருகிறது- மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 78 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்த நிலையில் 69 லட்சம் டோஸ் போடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சென்னையில்  சாதாரண படுக்கைகளுடன், ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் 78 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்த நிலையில் 69 லட்சம் டோஸ் போடப்பட்டுள்ளது.

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால் கொரோனா அதிகரிப்பது குறைந்து வருகிறது.

வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.

கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிக்கும் கோவை உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு விதிகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.