அமைச்சர் சிவி சண்முகம் 
செய்திகள்

டிடிவி தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, டிடிவி தினகரன் செயல்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை:

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் அமைச்சர்கள் மீண்டும் புகார் மனு அளித்துள்ளனர். டிஜிபியிடம் புகாரளித்த பின்னர் சென்னையில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்புவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் அவர் செயல்படுகிறார்.

டிஜிபி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் எங்களை தடுக்க முடியாது என தினகரன் கூறி உள்ளார். தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, டிடிவி தினகரன் செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT