வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் 
செய்திகள்

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அதி தீவிர புயலான நிவர் புயல் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3 மணிக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கடலூரில் கடந்த 12 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பெய்துள்ளது. நாளையும் கனமழை தொடரும் என்றும் புயல் கரையை கடந்த பின்னரும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.