சுரண்டை:
சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் சுரண்டை- சாம்பவர்வடகரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை வழிமறித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த வியாபாரி பீர் முகம்மது (வயது 74) என்பதும், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மொபட்டில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பீர் முகம்மதுவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 108 லாட்டரி சீட்டுகள், ரூ.4,250 மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.