நகை பறிப்பு 
செய்திகள்

மேலூர் அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

மேலூர் அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மேலூர்:

மேலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி கோமேஸ்வரி(வயது 34). இவர் வயலுக்கு சென்று விட்டு ஊரின் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியபடி 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கோமேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.