விபத்து பலி 
செய்திகள்

மேலூர் அருகே பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி

மேலூர் அருகே பஸ் மீது கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மேலூர்:

மேலூர் அருகே நான்கு வழி சாலையில் சுங்கச்சாவடி பகுதியில் மதுரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையின் நடுவே இருந்த  தடுப்பு சுவரை தாண்டி எதிர்திசையில் நோக்கி கார் பாய்ந்தது. அப்போது அந்த சாலையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மதுரையை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ் (வயது 30) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துகணேஷ்(30) என்ற குத்து சண்டை வீரர் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி லேசான சேதம் அடைந்தது.