கைது 
செய்திகள்

மெலட்டூர் அருகே மணல் கடத்தியவர் கைது

மெலட்டூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெலட்டூர்:

மெலட்டூர் அருகே சங்கராம்பேட்டை பகுதியில் மெலட்டூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெட்டாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்த போலீசார் மாட்டு வண்டியை மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கராம்பேட்டை பகுதியை சேர்ந்த குமார் (வயது 55) என்பதும் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.