மெகபூபா முப்தி 
செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: மெகபூபா முப்தி

இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

காஷ்மீரின் எல்லை பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பல இடங்களில் தாக்குதல் நடத்தியது. இதில், நமது பாதுகாப்பு படையினர் மூவரும், பொது மக்களில் மூவரும் பலியானார்கள். இதற்கு பதிலடியாக நம் வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்குள்ள அரசியல் நிர்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். வாஜ்பாயும், முஷரப்பும் ஒப்புகொண்ட அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்துவது, பேச்சுவார்த்தைக்கு நல்ல துவக்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.