குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே நல்லூர் கசவன்விளையை சேர்ந்தவர் ராஜமணி (வயது 70). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனம் உடைந்த அவர், வீட்டின் அருகில் உள்ள ஒரு கோவில் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.