மரக்காணம்:
மரக்காணம் அடுத்த திடீர்நகர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 63). இவர் வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மரக்காணம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், 10 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்து சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.