டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று காலை நடைபெற்றது.
இந்தியா சார்பில் மானு பாகெர், சவுரப் சவுத்ரி கலந்து கொண்டனர்.
முதல் சுற்றில் இந்த ஜோடி வென்றது.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 2-வது சுற்றில் தோல்வி அடைந்து இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.