உலக செவிலியர் தின விழா 
செய்திகள்

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா

மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அனைத்து செவிலியர்களுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் நினைவு பரிசு வழங்கினார்.

மாலை மலர்

மன்னார்குடி:

நைட்டிங்கேள் அம்மையாரின் பிறந்த நாளான மே மாதம் 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சமூக பணி ஆற்றிவருகின்றனர். 

இந்தநிலையில் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அனைத்து செவிலியர்களுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து அனைவரும் செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜன், தலைமை செவிலியர் வசந்தா, செவிலியர்கள் வசந்தி, விஜயா, தனபாக்கியம், அமுதா மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.