வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ராஜ்குமார் (வயது 31). கார் டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவர் அய்யலூரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவருடன பழகி வந்தார்.
இவர்களது கள்ளத்தொடர்பு தெரியவரவே இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த மார்ச் 21-ந் தேதி வேடசந்தூர் அருகே உள்ள தங்கமலை பகுதிக்கு ரஞ்சிதாவை அழைத்துச் சென்ற ராஜ்குமார் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார்.
இதனையடுத்து வட மதுரை போலீசார் அவரை கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி அதற்கான உத்தரவை வழங்கினார். இதனையடுத்து திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.