கமல்ஹாசன் 
செய்திகள்

பிப்ரவரி 11-ல் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூடுகிறது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை: 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் காலை 10 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூடுகிறது. 

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் 2021 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT