கைது 
செய்திகள்

மயிலம் அருகே வியாபாரியை மிரட்டியவர் கைது

மயிலம் அருகே வியாபாரியை மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மயிலம்:

மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணம் வெண்ணிலா நகரை சேர்ந்தவர் நாராயணன்(வயது 34). கறிவேப்பிலை வியாபாரியான இவர் திண்டிவனம் கிடங்கல் 2 எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த பாஸ்கர் என்கிற ஆட்டோ பாஸ்கர் (45) என்பவரிடம் கடனாக ரூ.12 லட்சம் வாங்கியுள்ளார். இந்த கடனுக்கு மாதந்தோறும் வட்டி கட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கால் வியாபாரம் சரியாக இல்லாததால் நாராயணன், பாஸ்கருக்கு ஒரு மாத வட்டி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பாஸ்கர், நாராயணன் வீட்டுக்கு சென்று, அவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதுடன் நாராயணனை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.