கமல்ஹாசன் 
செய்திகள்

மகேந்திரன் ஒரு துரோகி- கமல்ஹாசன்

துரோகிகளை களையெடுக்கும் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியது குறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

துரோகிகளை களையெடுக்கும் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாக்க கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. 

தோல்வியை அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார் மகேந்திரன். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகக் பெரிய உதாரணம் அவர்தான். 

முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ள துணிந்தார் மகேந்திரன்.  கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்த அவர், ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக் கொண்டுள்ளது. இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ , மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை என்றார்.

SCROLL FOR NEXT