கோப்புப்படம் 
செய்திகள்

ரூ.28½ லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

மராட்டிய மாநிலத்தில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்மஆசாமிகள் ரூ.28½ லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜால்னா:

மராட்டிய மாநிலம் ஜால்னா நகர் நாகேவாடி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை ஒரு வாகனத்தில் வந்த மர்மஆசாமிகள் சிலர், அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் எந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருந்த வயர்களை பிடுங்கி எறிந்துவிட்டு, எந்திரத்தை அலேக்காக தூக்கி வாகனத்தில் போட்டுக்கொண்டு தப்பிச்சென்றனர்.

கொள்ளையடித்து செல்லப்பட்ட அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.28 லட்சத்து 64 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

SCROLL FOR NEXT