பாஸ்கர் ராமமூர்த்தி 
செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு அதிகாரியாக பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம்

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு குழு அதிகாரியாக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை:

மதுரை தோப்பூரில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் அதற்கான கட்டுமான பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பல்வேறு கட்டமைப்புக்கான சிறப்பு குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கான அறிவிப்புகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

மருத்துவ படிப்பு சார்ந்த படிப்புகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கான நியமனத்தை இன்று அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT