கைது 
செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோகனூர்:

மோகனூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையிலான போலீசார் மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டிகேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சென்னாக்கல்புதூரை சேர்ந்த செல்வம் (வயது 60) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT