வீரபாண்டி:
திருப்பூர் கருவம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் 2-வது வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). அதே பகுதியில் சிறிய பனியன் நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த 6 மாத காலமாக கடன் தொல்லை அதிகரித்ததால் பனியன் நிறுவன தொழிலை கை விட்டதாக தெரிகிறது. இதனால் கணேசன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பனியன் நிறுவனத்திலேயே கணேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.