விபத்து 
செய்திகள்

வாலாஜா அருகே லாரி மோதி முதியவர் பலி

வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அம்மூரில் இருந்து வாலாஜாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

வாலாஜாவில் சோளிங்கர் ரோட்டில் உள்ள தாசில்தார் குடியிருப்பு பகுதி அருகில் வந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி திடீரென அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.