மத்திய அரசு 
செய்திகள்

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவ ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்: மத்திய அரசு

முதலாண்டில் வட்டியை மட்டும் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த மூன்றாண்டுகளில் முதலுடன் வட்டியையும் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரித்துள்ளது.

மருத்துவமனைகள்  வளாகங்களிலேயே ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ஏழரை விழுக்காடு வட்டியில் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ஆண்டுக்கு ஏழரை விழுக்காடு வட்டியில் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்க முழு உத்தரவாதத்தை மத்திய நிதியமைச்சகம் வழங்கும். அவசரக்காலக் கடன் செலுத்தலாம்.

முதலாண்டில் வட்டியை மட்டும் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த  மூன்றாண்டுகளில் முதலுடன் வட்டியையும் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரித்துள்ளது.