கோப்புபடம் 
செய்திகள்

சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது

சாத்தான்குளம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம்:

தட்டார்மடம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

சாத்தான்குளம் அருகே முதலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த உடன்குடி தண்டுபத்து கிராமத்தை சேர்ந்த வாசன் (வயது 56) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் செய்தனர்.

SCROLL FOR NEXT