கோப்பு படம் 
செய்திகள்

மனைவியை வெட்டிக்கொன்ற கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை

வடுவூரில் மனைவியை வெட்டிக்கொன்ற கொத்தனாருக்கு ஆயுள் தண்டணை விதித்து திருவாரூர் கோர்ட்டில் தீா்ப்பு கூறப்பட்டது.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் உலகநீதி (வயது52). கொத்தனார். இவருடைய மனைவி முனிஸ்வரி (37). மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி உலகநீதி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் முனிஸ்வரியை அவரது கணவர் உலகநீதி வெட்டிக்கொலை செய்தார். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உலகநீதியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மனைவியை கொலை செய்த உலகநீதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபாராதமும் விதித்து திருவாரூர் மகிளா நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மல்லிகா ஆஜரானார்.