வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை 
செய்திகள்

96வது பிறந்தநாள்... வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

வாஜ்பாயின் பிறந்த தினம், பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் வாஜ்பாயை நினைவுகூர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு, மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர்.

SCROLL FOR NEXT