லல்லு பிரசாத் யாதவ் 
செய்திகள்

எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் லாலு பிரசாத் யாதவ் அனுமதி

காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக லாலு பிரசாத் யாதவ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு லாலு கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார். இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஜார்க்கண்ட் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் வெளியே வந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

இந்தநிலையில் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக அவர் நேற்று இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.