விபத்து பலி 
செய்திகள்

லாலாபேட்டை அருகே கார் மோதி படுகாயமடைந்த தொழிலாளி பலி

லாலாபேட்டை அருகே கார் மோதி படுகாயமடைந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

லாலாபேட்டை:

லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சி புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 51). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 16-ந்தேதி திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரத்தில் இருந்து லாலாபேட்டைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் செல்வராஜ் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியா சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.