பொக்லைன் எந்திரத்தில் ஆற்றை கடந்த மருத்துவ பணியாளர்கள் 
செய்திகள்

பொக்லைன் எந்திரத்தில் ஆற்றை கடந்த மருத்துவ பணியாளர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொக்லைன் வண்டியை பாலம்போல பயன்படுத்தி ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மாலை மலர்

லடாக்:

யூனியன் பிரதேசமான லடாக்கில் இதுவரை 19 ஆயிரத்து 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது ஆஸ்பத்திரியில் 1011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்ஜியால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் “கொரோனா முன்கள பணியாளர்கள் தங்கள் மருத்துவ சேவைக்காக லடாக்கின் கிராமத்துக்கு வருகிறார்கள், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை கொடுப்போம்” என தெரிவித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் பொக்லைன் வண்டியில் முன்பக்கத்தில் இருக்கும் தோண்டும் பகுதியை, பாலம்போல பயன்படுத்தி மருத்துவ பணியாளர்கள் 4 பேர் ஆற்றை கடக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.