எல் முருகன் 
செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- விசாரணை நடத்த எல்.முருகன் வலியுறுத்தல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து சம்பவத்திற்கு காரணமான நிர்வாகத்தையும் பூசாரிகளையும் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலை மலர்

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இது முழுக்க, முழுக்க ஆலய நிர்வாக கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம். இந்த ஆலய நிர்வாகமானது தொடர்ந்து ஆலய பூஜைகளில் முறையாக கவனம் செலுத்தாமல் ஒரு சீர்கெட்ட நிர்வாகமாக இருந்து கொண்டிருக்கிறது.

ஆகவே இந்த சம்பவத்திற்கு காரணமான நிர்வாகத்தையும் பூசாரிகளையும் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.