விபத்து பலி 
செய்திகள்

குருபரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- புதுமாப்பிள்ளை பலி

குருபரப்பள்ளி அருகே விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த கங்கசந்திரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26). அதேபகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் (25), லோகேஷ் (25). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். விஷ்ணு மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றார். அவர்கள் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஸ்ரீதர், லோகேஷ் ஆகியோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியான விஷ்ணுவிற்கு கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.