கோப்புபடம் 
செய்திகள்

குளித்தலை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

குளித்தலை அருகே புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

குளித்தலை:

குளித்தலை புதுகோர்ட் தெரு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரிட்டோலாரன்ஸ் (வயது 40) என்பவர் அவரது கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில், அதன் உரிமையாளரான மணி (32) என்பவர் புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.