குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் நுகர்பொருள் வாணிப கழக நவீன சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்க அனைத்து லாரிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார், தலைமையில் சேமிப்பு் கிடங்கு முன்பு டாரஸ் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தாசில்தார் தலைமையில் பேசி தீர்வு காணப்படும் என கூறினார். இதன்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.