மரணம் 
செய்திகள்

குடவாசல் அருகே விவசாயி திடீர் மரணம்

குடவாசல் அருகே விவசாயி திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள பாலவாய் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது60). விவசாயி. சம்பவத்தன்று இவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.