கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம் மற்றும் போலீசார் கொட்டாம்பட்டி அருகே உள்ள மணல்மேட்டுப்பட்டி விலக்கு அருகே சோதனை நடத்தினர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவம் (43) என்பவரை கைது செய்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.