கைது 
செய்திகள்

முசிறி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது

முசிறி அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

முசிறி:

முசிறி அருகே குஞ்சாநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். 

விசாரணையில், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் தச்சு வேலை செய்து வரும் விக்னேஷ்(வயது 23) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து திருப்பூரில் இருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். பின்னர், சிறுமியை கடத்தியதாக விக்னேஷ் மீது முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT