கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களது மகள் சுசேத்தா சதிஷ் (வயது16). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார்கள்.
மாணவி சுசேத்தா சதிஷ் துபாயில் உள்ள இந்திய பள்ளியில் படித்து வருகிறார். இளம் வயதில் இருந்தே இந்துஸ்தானி, கர்நாடக இசையில் ஆர்வமுடைய சுசேத்தா சதிஷ் ஏராளமான மேடைகளில் பாடி வருகிறார். கடந்த 2010-ம் ஆண்டு துபாயில் உள்ள இந்திய கலையரங்கத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் 102 மொழிகளில் பாடினார்.
தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் பாடி சாதனை படைத்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 19-ந்தேதி இந்திய தூதரக கலையரங்கத்தில் நடந்த சாதனை நிகழ்ச்சியில் 122 மொழிகளில் பாடி சாதனை படைத்தார். இது உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றது.
இளம்வயதில் இருந்தே பாடல்கள் மற்றும் இசை என்மனதில் ஆழமாக பதிந்து விடும். இதனால் சுலபமாக பாடும் திறமை பெற்றேன். என்னால் தற்போது மலையாளம், தமிழ், ஜெர்மனி, ஜப்பானிய மொழி உள்பட மொழிகளில் பாட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி சுசேத்தா சதிஷ் உலக குழந்தை மேதை உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் கொரோனாவால் இளம் வயதினர் அதிகம் பாதிப்பு