கோப்புபடம் 
செய்திகள்

கேரளாவில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 93 வயது முதியவர் போக்சோவில் கைது

கேரளாவில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 93 வயது முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்தலா கிழவூரை சேர்ந்தவர் காசிம்குஞ்சு (வயது93).

இவர் முதுமையின் காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.அவரை பார்ப்பதற்காக உறவுக்கார பெண் ஒருவர் தனது 8 வயது சிறுமியுடன் வந்திருந்தார்.

பின்னர் உடல்நலம் விசாரித்து விட்டு சிறுமியுடன் தன் சொந்த மாவட்டத்துக்கு திரும்பினார். அங்கு சிறுமிக்கு கடுமையான காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்தபோது சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து சிறுமியின் தாயார் சைல்டு லைன் உதவி எண்ணில் புகார் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது முக்தலா கிழவூரை சேர்ந்த காசிம்குஞ்சு என்பது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.