முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

கேரளாவுக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிவாரணம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்குள்ளாகி இருப்போருக்கு ஆறுதலையும் தி.மு.க. தெரிவித்து கொள்கிறது.

மாலை மலர்

சென்னை:

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து, இடப்பெயர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்திருக்கின்றன.

பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில் தி.மு.க. அறக்கட்டளை சார்பாக கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை தி.மு.க. மற்றும் தி.மு.க. அறக்கட்டளை தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

இப்பெரு வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்குள்ளாகி இருப்போருக்கு ஆறுதலையும் தி.மு.க. தெரிவித்து கொள்கிறது.

மேற்கண்ட தகவல் தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு- தமிழக அரசு உத்தரவு