பினராயி விஜயன் 
செய்திகள்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்

தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் முதல்-மந்திரி பினராயி விஜயனை எதிர்த்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் பத்மனாபன் களம் இறங்குகிறார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஈடுபட்டு உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியும் கேரளாவில் கால் பதிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று (15-ந் தேதி) காலை 11 மணிக்கு கண்ணூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தனது கட்சி ஆதரவாளர்களுடன் வந்த அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் முதல்-மந்திரி பினராயி விஜயனை எதிர்த்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் பத்மனாபன் களம் இறங்குகிறார்.