ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள காடுகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன்தினம் பைரமங்கலம்- ஓசூர் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.