கைது 
செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், குண்டுகொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கிரானைட் கம்பெனியின் பின்புறம் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கருக்கன்சாவடி ஈஸ்வரன் (வயது 42), மாது (49), காவேரிப்பட்டணம் கோட்டை தெருவை சேர்ந்த குணா (46) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.