காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அருகே பாகவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 27), ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து சென்று சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.