மரணம் 
செய்திகள்

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி

கரூரில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கரூர்:

கரூர் வெங்கமேடு செங்குந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50). பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ரங்கநாதன் படுகாயமடைந்தனர்.

இதையடு்த்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரங்கநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.