கரூர்:
தை மாதம் அறுவடை சீசன் என்பதால் கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, ரங்கநாதபுரம், பணிக்கம்பட்டி, தோகமலை ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து வேளாண் துறையினர் நேரடியாக நெல் கொள்முதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா பணிக்கம்பட்டி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கடந்த 15 நாட்களாக தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நெல் கொள்முதல் நிலைய சூப்பர்வைசர் பிரகாஷ் என்பவர் தினமும் 40 டோக்கன்கள் மட்டுமே வழங்குகிறார்.
அத்துடன் லஞ்சம் தரும் விவசாயிகளிடமும், அரசியல் செல்வாக்கு பெற்ற இடைத் தரகர்களிடம் இருந்தும் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 15 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கொள்முதல் நிலைய சூப்பர்வைசர் பிரகாசிடம் கேட்டபோது, இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய நபர்கள் பணியில் இல்லை. எனவே பாஸ்கர் என்பவரை நான் துணைக்கு வைத்துள்ளேன். இதனால் பணியை விரைவாக செய்ய முடியும். மேலும் பாஸ்கர் என்பவர் இடைத்தரகர் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். கூடுதல் பணியாளர் நியமித்தால் விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்
ஏற்கனவே மழையினால் பாதிக்கப்பட்டு மிகக்குறைந்த அளவே விளைச்சல் பெற் றுள்ள நாங்கள் விளைவித்த நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் சுமார் பதினைந்து நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று அப்பகுதி விவசாயி பாலகிருஷ்ணன் என்பவர் வேதனையுடன் தெரிவித் தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் இருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.