கைது 
செய்திகள்

கண்டெய்னர் லாரி திருடியவர் கைது

கண்டெய்னர் லாரி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 49). இவர், சம்பவத்தன்று கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டையம்பரப்பு அருகே தான் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த கன்டெய்னர் லாரியை மர்ம நபர்கள் திருடி ஓட்டிச் சென்று விட்டனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசில் வேலுச்சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரியை திருடி ஓட்டிச் சென்றதாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராமச்சந்திரன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT